அரசியலில் நேர்மை

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

அரசியலில் நேர்மை

சாத்தியம் : 50% (12 வாக்குகள்)

சாத்தியம் இல்லை : 50% (12 வாக்குகள்)

 

கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடும்போது என்னுடைய கருத்தை நான் சொல்லக் கூடாது என்பது எனது கட்டுப்பாடுகளில் ஒன்று.

நடுநிலை காக்க வேண்டிய கடமைதான் காரணம். அதைத் தாண்டி ஒரு சில வரிகள் இந்த வாரம் எழுத விரும்புகிறேன்.

அரசியல் என்பது பலருக்காக சிலர் உழைப்பது என்று இல்லாமல் சிலருக்காகப் பலர் உழைப்பது என்று இருக்கின்றது இன்றைய சூழல்.

நல்ல எண்ணம், நல்ல சொல் மற்றும் நல்ல செயல் உடையவர்கள் வாழத் தெரியாத இளிச்சாவாயர்கள் என்பதே இன்றைய பொதுப்புத்தி.

பொது வாழ்வில் நேர்மையாக இருக்க விரும்புபவர்கள் நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அவர்களால் குடும்பத்திற்காக முழுக்கவனத்துடன் உழைக்க முடியாது. குடும்பத்தினரிடம் நேரம் செலவழிக்க முடியாது.

பணம், பதவி மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் மீது விருப்பம் கொண்டுப் பலர் தப்பான வழியில் அவற்றை அடைய விரும்புகின்றனர். அவர்கள் பொது வாழ்வில் நேர்மையாக இருப்பவர்களை மிக எளிதாகத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

நல்லவனாக மட்டும் இல்லாமல் வல்லவனாகவும் இருப்பவர்களால்தான் பொதுவாழ்வில் நேர்மையாக இருக்க முடியும்.

கடந்த வாரக் கருத்துக் கணிப்புக் கேள்வியைத் தேர்வு செய்ததும் 25% பேர்தான் சாத்தியம் என்று சொல்வார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் சரி பாதிப்பேர் அரசியலில் நேர்மை சாத்தியம் என்று சொல்லி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

வாய்மையே வெல்லும் என்பது பொய்யல்லவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

–வ.முனீஸ்வரன்
இனிது ஆசிரியர்

முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்

முட்டை

முட்டை சத்தான உணவு என்பது உங்களுக்குத் தெரியும். முட்டை பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜுன் 2018

ஹோண்டா ஆக்டிவா

2018ம் வருடம் ஜுன் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜுன் 2018”

டயபர் வசதி அல்ல; எதிரி

Disposablediaper

டயபர் இன்றைக்கு எல்லா சிறுகுழந்தைகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிலர் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்திருப்பர்.  Continue reading “டயபர் வசதி அல்ல; எதிரி”

சாயம் வெளுத்துப் போச்சு

Fox

முன்னொரு காலத்தில் மகிழ்வனம் என்றொரு காட்டில் விலங்குகள் பல வாழ்ந்து வந்தன. அக்காட்டிற்கு ராஜாவாக சிங்கம் சின்னையா இருந்தது. அது தன்னுடைய காட்டு மக்களை நன்கு பாதுகாத்து வந்தது. Continue reading “சாயம் வெளுத்துப் போச்சு”

அங்கம் வெட்டின படலம்

Sword-fight

அங்கம் வெட்டின படலம் தன்னுடைய பக்தையின் துயரினைப் போக்க இறைவனான சொக்கநாதர் கொடியவனான சித்தனின் அங்கங்களை வெட்டியதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “அங்கம் வெட்டின படலம்”

இலியட் உலக மகாகாவியம்

இலியட்

உலக மகாவீரன் அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாடில் கூறிய கிரேக்கக் கதைதான், வீரத்தையும் விவேகத்தையும் கொடுத்தது. அதனால்தான், அவன் உலகை வலம் வந்தான். அலெக்சாண்டரின் உள்ளம் கவர்ந்த மகாகாவியம் தான், இலியட். Continue reading “இலியட் உலக மகாகாவியம்”