எங்கள் பாப்பா

எங்கள் பாப்பா தங்கப் பாப்பா!

எழுந்து விழுந்து நடக்கும் பாப்பா!

செங்கை ஆட்டி அழைக்கும் பாப்பா!

சிறுவிரல் சப்பித் தூங்கும் பாப்பா!

 

விரலை வைத்தால் கடிக்கும் பாப்பா!

வெடுக்கென் றிழுத்தால் சிரிக்கும் பாப்பா!

கையைப் பிடித்து நடக்கும் பாப்பா!

கட்டி முத்தம் கொடுக்கும் பாப்பா!

 

குத்து விளக்கே எங்கள் பாப்பா!

குனிந்து சாய்ந்தே ஆடும் பாப்பா!

முத்தம் கொடுத்தால் முத்தம் கொடுக்கும்!

முகத்தை மறைத்தால் கையை எடுக்கும்!

– கவிஞர் வாணிதாசன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது