காதல் நோய்

ஒளியாய் நீ வருவாயா? – உயிரில்
ஒன்றென கலந்து நிறைவாயா?
கனிவாய் மலர்ந்து ஒருவார்த்தை
காதல் மொழியினில் தருவாயா?

வெளியினில் ஆதவன் விரிந்திருக்கும்
வரைதான் இருளும் அகன்றிருக்கும்
தெளிவாய் உன்விழி பார்த்திருக்கும்
வரைதான் என்மனம் செழித்திருக்கும்

வளியெனும் காற்றால் நிறைந்திருக்கும்
வரைதான் புவியும் நிறைந்திருக்கும்
துளியென உன்னருள் நிறைந்திருக்கும்
வரைதான் என்னுயிர் நிலைத்திருக்கும்

தளிரென இருக்கும் உன்நினைவே
தழைத்திட நீயும் வருவாயா?
தணிந்திட காதல் நோய்தனக்கு
தகுந்த மருந்தினைத் தருவாயா?

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது