தென்னை

தென்னை நீண்ட தென்னை

தென்னம் பிள்ளை அழகு

தன்னை வளர்த்தோர்க்கு என்றும்

தலையால் கொடுக்கும் தென்னை

 

பாளை விரித்துச் சிரிக்கும்

பச்சை மட்டை விரிக்கும்

தோளில் தேங்காய்க் குலைத்

தொங்க விட்டே நிற்கும்

 

தென்னை போலே வளர்க்கும்

செவ்விள நீரைத் தருவோம்

அன்னை தந்தை யார்க்கும்

அளிப்போம் வாரி அளிப்போமே

– வாணிதாசன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது