படைப்புகளை வரவேற்கிறோம்

வணக்கம்; உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

நீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்கலாம்; அல்லது இதுவரை எதுவுமே எழுதாதவராக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் சரி, மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்து உங்களிடம் இருந்தால் இனிது இதழ் உங்களை எழுதத் தூண்டுகிறது.

 

எழுதத் தயங்காதீர்கள்

மனிதகுலத்துக்குத் தேவையான எதைப்பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்.

உங்களின் ஒரு சிறு படைப்பு, யாரோ ஒருவரின் மனதில் விதையாய் விழுந்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.

எழுத்துப் பிழை வரலாம் எனப் பயப்படாதீர்கள். நாங்கள் அதை சரிசெய்து கொள்கிறோம்.

மிக நீண்ட‌ பயணத்தின் முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்கள் திறமையின் எல்லை விரிந்து கொண்டே செல்லட்டும்.

 

எதை எழுதுவது?

எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள்.

உங்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கின்றதா? அதைப் பற்றி எழுதுங்கள்.

சுய‌முன்னேற்றம் பற்றி எழுதுங்கள்.

உடல்நலம் மற்றும் உணவு பற்றி எழுதுங்கள்.

உங்கள் பயணம் பற்றி எழுதுங்கள் அல்லது புகைப்படம் ,  காணொளி அனுப்புங்கள்.

இந்தப் பூமியைக் காக்கும் வண்ணம் சுற்றுச்சூழல் பற்றி எழுதுங்கள்.

இலக்கியம் பற்றி எழுதுங்கள் அல்லது புதிய இலக்கியம் படையுங்கள்.

இருபத்திரண்டாம் நூற்றாண்டிலும் தமிழ் தரணியில் நிலைக்க வேண்டுமானால் அதைக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகச் சிறுவர் இலக்கியம் படையுங்கள்.

எல்லாம் அவன் செயல் என்று ஆன்மிகம் பற்றி எழுதுங்கள்.

அறிவியல் பேசும் தகுதி தமிழுக்கு உண்டு என்று நிரூபிக்கும் வண்ணம் அறிவியல் கட்டுரைகள் எழுதுங்கள்.

ஆய்வுக் கட்டுரைகள் எழுதுங்கள்.

இவை தாண்டி எது பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள். அது மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்தாக இருக்க வேண்டும்; அவ்வளவுதான்.

 

எப்படி எழுதுவது?

கட்டுரையாக எழுதலாம்.

கவிதையாக எழுதலாம்.

கதையாக எழுதலாம்.

ஓவியமாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.

நல்ல புகைப்படத்தை, காணொளியை உருவாக்கலாம்.

 

எப்படி அனுப்புவது?

தங்களுக்கு கணினியில் நல்ல பரிச்சயம் உண்டு என்றால் தயவுசெய்து தட்டச்சு செய்து அனுப்பவும்.

உங்கள் படைப்புகள் பாமினி அல்லது யுனிகோடில் இருந்தால் நல்லது. யுனிகோடில் தட்டச்சு செய்ய முரசு , ஈகலப்பை , அழகி, NHM Writer ஆகிய செயலிகளை உபயோகிக்கலாம்.

www.tamileditor.org என்ற இணையதளத்தை தட்டச்சு செய்ய உபயோகிக்கலாம். நாங்கள் இந்த தளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றோம்.

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : [email protected]

 

தாள்களில் எழுதி அனுப்புவதாக இருந்தால் தயவுசெய்து முதலில் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் படைப்பின் ஒரு பிரதியை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

 

இனிது இணைய இதழ்
ரோவன் சாப்ட்வேர் சொலுசன்ஸ்
4 / 1332 சாமிபுரம் காலனி
சிவகாசி ‍ 626189

 

உங்களின் சந்தேகங்களுக்குத் தயங்காமல் என்னுடைய அலைபேசி எண் 9943906900 மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

மகிழ்வுடன் உங்களது படைப்புகளை வரவேற்கிறோம்

சிறகை விரிப்போம்; வானம் நமதே!

அன்புடன்
வ.முனீஸ்வரன்
ஆசிரியர்
இனிது இணைய இதழ்

 

Leave a Reply

Your email address will not be published.