போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்

பொங்கல் பானை இருக்குதுங்க‌
போட அரிசி கிடைக்கலங்க‌
இங்க எங்க வாழ்க்கை கூட‌
இனிப் பில்லாம இருக்குதுங்க‌

உலக வங்கி சொல்லும் விலையில்
உள்ளூர்க் கரும்பு கசக்குதுங்க‌
அழகு மஞ்சள வளர்க்கக்கூட‌
அடுத்த நாடு தடுக்குதுங்க‌

வீதியில் பொங்கல் வச்சு
வேணுமளவு தருவதற்கு
சாதியோட பேரச் சொல்லி
சண்டியர் கூட்டம் வருது

ஆளுக்கே பொங்கல் இல்ல‌
ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஏது
பாழும் உலக மயத்தினாலே
பாழாய்ப் போனது நாங்க தாங்க‌

போகியில தூக்கி எறிஞ்ச‌
பொருளப் போல நாங்க‌
ஆகிப்போன பின்னும் கூட‌
அரசு தேடுது ஓட்டுக்காக!

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது