யார் நாத்திகன்?

யார் நாத்திகன் என்று விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள்!

எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

மனித வாழ்க்கையைப் பற்றி அவர் மேலும் சொல்வதைப் பாருங்கள்.

 

ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே

 

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் நீ நிச்சயமாக வலிமை படைத்தவனாகவே ஆகி விடுகிறாய்.

 

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று எந்நாளும் சொல்லாதே.

 

நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய எல்லாம் வல்லவன் என்று நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூடச் சக்தி அற்றதாகி விடும்.

 

உனக்கு தேவையான எல்லா சக்தியம் உனக்கு உள்ளேயே குடி கொண்டு இருக்கின்றன.

 

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை ஆகும். அத்துடன் இவை எல்லாவற்றிற்கும் மேல் அன்பு இருந்தாக வேண்டும்.

 

கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள்.

 

சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒருவரை அவர் இல்லாதபோது தூற்றுவதை ஒரு போதும் கேட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.

 

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும், அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும்.

 

யார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத் தான் அடைகிறான்.

 

ஆன்மீகத்தில் மிகுந்த வலிமையும் ஆற்றலும் நிறைந்தவன் விரும்பினால் வாழ்க்கையில் மற்ற எல்லாத்துறைகளிலும் பேராற்றல் பொருந்தியவனாக விளங்க முடியும்.

 

அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.

 

தெளிந்த மனதுக்கு நிகரான குரு இல்லை. மனமே நமக்கு நண்பன். மனமே நமக்கு பகைவன்.

 

மனதை வென்றவர்களுக்கு மேன்மைகள் அனைத்தும் தாமாகவே வந்து அடைகின்றன.

 

நல்லதையும் கெட்டதையும் கேட்பதால் காது கெடாது. ஆனால் மனம் கெட்டுப் போகிறது. மாசற்ற மனமே ஆன்மீகச் செல்வம்.

 

மனிதனுக்கு பண்பு வேண்டும். பண்பு இல்லாதவனுக்கு எது இருந்தும் பயன் இல்லை.

– விவேகானந்தர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது