உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு போண்டா மாலை நேரத்தில் காப்பி, டீ போன்றவற்றுடன் உண்பதற்கு ஏற்ற சிற்றுண்டி ஆகும். இதன் சுவை எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

எளிதாக‌ சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 200 கிராம்

உளுந்தம் பருப்பு – 100 கிராம்

உருளைக்கிழங்கு – 200 கிராம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

கரம்மசாலாப் பொடி – இரண்டு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2ஸ்பூன்

பெரிய வெங்காயம் – ஒன்று (பெரியது)

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை

பச்சரிசி, உளுந்தம் பருப்பு, காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் ஆகியவற்றை தனித்தனியே ஊற வைக்கவும்.

 

நனைய வைத்த பச்சரிசி
நனைய வைத்த பச்சரிசி

 

பின் பச்சரிசியுடன், மிளகாய் வற்றலைச் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

உளுந்தம் பருப்பினை தனியாக அரைத்து பச்சரிசி மாவுடன் தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

அரிசிமாவுக் கலவையானது பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

 

பச்சரிசி,உளுந்து மாவுக் கலவை
பச்சரிசி,உளுந்து மாவுக் கலவை

 

உருளைக்கிழங்கினை அவித்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக்கவும். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் கரம் மசாலாப் பொடி, நறுக்கிய இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

 

இஞ்சி சேர்த்து மசித்த உருளைக்கிழங்கு
இஞ்சி சேர்த்து மசித்த உருளைக்கிழங்கு

 

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வதக்கவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

வெங்காயம் நன்கு வதங்கிய பின்பு மசித்த உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து ஒரு சேரக் கிளறி இறக்கவும்.

 

உருளைக்கிழங்கு சேர்த்தவுடன்
உருளைக்கிழங்கு சேர்த்தவுடன்

 

தயார் நிலையில் உருளைக்கிழங்கு கலவை
தயார் நிலையில் உருளைக்கிழங்கு கலவை

 

உருளைக்கிழங்கு கலவை ஆறிய பின்பு அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

 

உருண்டைகளாக உருளைக்கிழங்கு கலவை
உருண்டைகளாக உருளைக்கிழங்கு கலவை

 

வாணலியில் பொரிக்கும் எண்ணெயினை காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கு உருண்டையை அரிசி மாவுக் கலவையில் முக்கி எண்ணெயில் போடவும்.

 

மாவில் முக்கிய உருளைக்கிழங்கு உருண்டை
மாவில் முக்கிய உருளைக்கிழங்கு உருண்டை

 

போண்டாவை எண்ணையில் போடும் போது
போண்டாவை எண்ணையில் போடும் போது

 

போண்டா ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் பிரட்டி வேக வைத்து எடுக்கவும்.

 

ஒருபுறம் வெந்த உருளைக்கிழங்கு போண்டா
ஒருபுறம் வெந்த உருளைக்கிழங்கு போண்டா

 

சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார். இதனை தேங்காய் சட்டினியுடன் சேர்த்து உண்ணலாம்.

 

தயார் நிலையில் உருளைக்கிழங்கு போண்டா
சுவையான உருளைக்கிழங்கு போண்டா

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் உருளைக்கிழங்கு கலவையில் மஞ்சள் பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து கலவை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.