தைலம்

மூலிகைச் சரக்குகளைக் கற்கமாக்கியோ அல்லது சாறுகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ எடுத்து கொள்ளவது தைலம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் தைலத்தை ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

 

அருகன் தைலம்

அருகம்புல்லை இடித்துச் சாறு பிழிந்து அத்துடன் சிறிது அதிமதுரம் சேர்த்து சாற்றுக்குச் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிக் தைலப் பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.

மேற்கொண்டவாறு தயார் செய்யப்படும் அருகன் தைலத்தை வெளிப்பூச்சாக தடவி வர அனைத்துத் தோல் நோய்கள், தலைமுடி உதிர்தல், புழுவெட்டு ஆகியன தீரும்.

 

பிண்ட தைலம்

நல்ல எண்ணெய் – 100 மில்லி லிட்டர்

தேன்மெழுகு – 10 கிராம்

குங்கிலியம் – 5 கிராம்

வேம்பாடம்பட்டை – 5 கிராம்

மேலே கூறியவற்றை முறைப்படிச் சேர்த்துத் தைலம் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதனை தேய்த்து வர அனைத்து வாத நோய்களும், மூட்டு வலிகளும் தீரும்.

 

மத்தன் தைலம்

ஊமத்தைச் சாறு – 100 மில்லி லிட்டர்

கேங்காய் எண்ணெய் – 100 மில்லி லிட்டர்

இரண்டையும் அடுப்பேற்றிக் காய்ச்சி தைலப் பதத்தில் வடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்த தைலத்தை ஆறாத புண், பிளவை போன்றவற்றிற்கு புண்ணில் வைத்துக் கட்டவும்.

 

கற்பூராதித் தைலம்

தேங்காய் எண்ணெயை அடுப்பேற்றிச் சூடேற்றியவுடன் சிறிது சூடம் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும். இதனை மார்பில் பூச நெஞ்சில் கட்டிய கோழை தீரும்.

 

கூந்தல் தைலம்

கரிசாலை, அவுரி, செம்பருத்தி, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, பொடுதலை, மருதோன்றி ஆகியவைகளை இடித்துப் பிழிந்த சாறு வகைக்கு 100 மில்லி லிட்டர் எடுத்து அதை 700 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து அடுப்பேற்றித் தைலப் பக்குவத்தில் காய்ச்சி இறக்கி வைக்கவும்.

இந்தக் கூந்தல் தைலத்தை தொடர்ந்து பூசி வர முடி உதிர்தல், செம்பட்டை, தலைப்பொடுகு ஆகியன தீரும். முடி நன்கு வளரும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.