பணக்காரக் கோவில்

இந்தியாவில் மிகவும் பணக்காரக் கோவில் எது? என்று ஆசிரியர் தன் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.

மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி என்று சொன்னார்கள்.

திருப்பதி ஏன் பணக்காரக் கோவிலாக உள்ளது என ஆசிரியர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னார்கள்.

அவர்கள் பதிலில் திருப்தி அடையாத ஆசிரியர் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது. ஆனால், திருப்பதியில் மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்.

மீண்டும் காலையில் 3 மணிக்கு எழுந்து தரிசனம் கொடுக்கின்றார். பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை.

மற்ற கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள். மேலும் பகலில் சாமிக்கு ஓய்வு உண்டு.

திருப்பதி வெங்கடாசலபதி கடினமாக உழைக்கும் கடவுளாக இருக்கிறார். அவரது கோவிலே இந்தியாவில் மிகவும் பணக்காரக் கோவிலாக உள்ளது.

ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா? என்று கேட்டார்.

தங்கள் முன்னேற்றத்திற்கான வழியைக் காட்டிய ஆசிரியரை மாணவர்கள் நன்றியுடன் வணங்கினர்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.