ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம் ஒரு நல்ல கதை. இன்றைய இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயத்தை அழகாக விளக்கும் கதை.

ரவியும், மணியும் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றனர். ஏன் என்றால் அன்று ரசிகர் மன்றம் திறப்பு விழா.

மணிதான் தலைவர்.

தோரணங்களும், கொடிகளும் கட்டி ஒலிப்பெருக்கியில் சத்தமாக பாடல் ஒலித்தது. இளைஞர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.

சினிமாவில் நடிக்கும் நடிகருக்காக இளைஞர்கள் இப்படி நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்களே என கந்தசாமி மனம் வருந்தியது.

கந்தசாமி அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும் போதே பல ஏழை மாணவர்களுக்குத் தன் சொந்த பணத்தில் உணவிட்டு, பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் கொடுத்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர். Continue reading “ரசிகர் மன்றம்”

ஆசிரியர் – புதுக்குறள்

ஆசிரியர்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர் Continue reading “ஆசிரியர் – புதுக்குறள்”

உன்னத உறவு

உன்னத உறவு

சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.

அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. Continue reading “உன்னத உறவு”

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய் என்ற கதை நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

பள்ளத்தூர் என்ற ஊரில் கன்னியப்பன் என்ற வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தன்னுடைய வியாபாரத்திற்கான பொருட்களைச் சுமப்பதற்கு கழுதையையும், வழிப்பயணத்தின் போது பாதுகாப்பிற்காக நாயையும் வளர்த்து வந்தார். Continue reading “தக்க நேரத்தில் உதவி செய்”

மாணவர் – புதுக்குறள்

அரசுப்பள்ளி

பருவத்தில் சிறந்த பருவம் மாணவர்

பருவம் உலகின் உருவம்

 

கல்வி கருவறை பள்ளியின் வகுப்பறை

மாணவ பருவத்தின் முதலறை

 

வாழ்வில் சிக்கலிலா கோலத்தின் முதல்

புள்ளி மாணவர் பள்ளி Continue reading “மாணவர் – புதுக்குறள்”