புளிக்குழம்பு செய்வது எப்படி?

புளிக்குழம்பு

புளிக்குழம்பு எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட கலவைச் சாதம் மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து உண்ண மிகவும் பொருத்தமாக இருக்கும்.

புளிக்குழம்பிற்கு பொதுவாக கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து செய்யப்படுகிறது. இது தவிர வெண்டைக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்டவைகளையும் வைத்து புளிக்குழம்பு செய்யப்படுகிறது.

Continue reading “புளிக்குழம்பு செய்வது எப்படி?”

முனையடுவார் நாயனார் – போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கு தொண்டு செய்தவர்

முனையடுவார் நாயனார்

முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த‌ வேளாளர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

முனையடுவார் நாயனார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் வசித்த வேளாளர். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.

பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர்கள் தம்மோடு மற்ற பல வீரர்களையும் சேர்த்துக் கொண்டு சிறுபடையை உருவாக்கி வைப்பர்.

Continue reading “முனையடுவார் நாயனார் – போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கு தொண்டு செய்தவர்”

வாழ்வு சிறக்க‌

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று புத்த தொண்டர்கள் உச்சரிப்பார்கள்.

அதன் பொருள் என்ன?

Continue reading “வாழ்வு சிறக்க‌”

நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39

நீர் பொழுதுபோக்கு

மீன் தொட்டியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கநிற மீன்களும், கருப்புநிற மீன்களும் ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தன.

சிறுமீன்கள் தொட்டியின் அடிப்பாகத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த சிறு கற்களுக்கிடையே அவ்வப்பொழுது பதுங்கியிருந்து, பின்னர் மீண்டும் மேலெழுந்து திரிந்தன.

ஒருவேளை அவைகள் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனவோ? என்னவோ! தெரியவில்லை.

ஆனால் பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

Continue reading “நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39”

அன்பினைப் பொழிந்திடில் – கவிதை

காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே

ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ

Continue reading “அன்பினைப் பொழிந்திடில் – கவிதை”