கனமழையை சமாளிக்கும் வகையில்

வெள்ளம்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கனமழையை சமாளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன

இல்லை – 53% (9 வாக்குகள்)

ஆம் – 47% (8 வாக்குகள்)

லில்லி குறும்படம் விமர்சனம்

லில்லி குறும்படம்

லில்லி குறும்படம் அனைத்து உயிர்களிடத்தும் இயற்கையான பாலியல் உணர்வுகள் உண்டு என்பதை ஆழமான வலியுடன் விளக்குகிறது.

“கூனோ, குருடோ, ஊனோ, முடமோ உணர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் உணர்வுகள் எல்லா உயிர்க்கும் பொது தானே” என்ற வசனத்தில் பொதிந்துள்ள நிதர்சனப் பெருவெளியை இக்குறும்படம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

நீங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வலியை, வேதனையைப் பெற்றுக் கொண்டே இருக்க விரும்பாதவர்களா? அப்படியாயின் இக்குறும்படத்தைப் பார்க்காதீர்கள். இந்த விமர்சனத்தையும் படிக்காதீர்கள்.

Continue reading “லில்லி குறும்படம் விமர்சனம்”

எல்லோரும் ஒருவரே – கவிதை

நானும் எனது நினைவுகளும்

மற்றும் எழுதும் காகிதமென

மூன்று அடுக்குகளாய் இருந்தோம்

அங்கே இங்கும் அங்கும்

தாவும் அர்த்தங்கள் மோதிக்கொண்டன‌

Continue reading “எல்லோரும் ஒருவரே – கவிதை”

வீணையடி நீ எனக்கு – சிறுகதை

வீணையடி நீ எனக்கு

நர்மதாவை நாராயணனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எதையுமே தேர்வு செய்யும் விஷயத்தில் நாராயணனை மிஞ்ச எவருமில்லை என்னும் கூற்று, அவனைப் பொறுத்த மட்டில் இப்போதெல்லாம் பேத்தலாகவே பட்டது.

நண்பர்களும் உறவினர்களும் அவனைப் பற்றி வானளாவப் புகழ்ந்து தள்ளுகிற போதெல்லாம் ரொம்பப் பெருமையாகத்தான் இருந்தது. எல்லாம் திருமணமாகும் வரைதான்.

அலுவலக நண்பர்களின் பிரிவுபசார விழாவாகட்டும், உறவினர்களின் திருமணமாகட்டும் பரிசுகள் வாங்குவதிலிருந்து புடவை, நகை, பாத்திரங்கள் எதுவாயிருப்பினும் நாராயணன் இல்லாமல் எதுவும் நடக்காது.

அவ்வளவு நேர்த்தியாக, பாங்காக, தரமாகத் தேர்வு செய்வான். அவன் தேர்வு செய்துவிட்டால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடலாம்.

Continue reading “வீணையடி நீ எனக்கு – சிறுகதை”

குறையொன்றும் இல்லை – கவிதை

உடலின் பாகங்களின் வளர்ச்சி குறைபாடெல்லாம்

குறையெனச் சொல்லி ஓடிட முடியாதே!

அவர்களின் தன்னம்பிக்கை கண்டாலே வானமும்

இரண்டு அடி இறங்கி வந்திடுமே!

Continue reading “குறையொன்றும் இல்லை – கவிதை”