நம் ஆசான்களே!

இன்று இமை விழித்துப் படிப்பதெல்லாம்
நாளை சுமை நீங்கி வாழ்வதற்கே – என்ற
சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு
பறைசாற்றியவர்கள் – நம் ஆசான்களே!

Continue reading “நம் ஆசான்களே!”

ஆறாம் அறிவு தரும் ஆசிரியர்

ஆசிரியர் பணி அறப்பணி

உன்னை உயர்த்தும் அற்புத ஏணி

தருவார் இனிய கல்விக்கனி

என்றும் சுறுசுறுப்பில் அவர் தேனி

Continue reading “ஆறாம் அறிவு தரும் ஆசிரியர்”

மீக்குளிர் நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 21

மீக்குளிர் நீர்

‘இன்று மாடி மற்றும் படிகட்டுகள் அனைத்தையும் சுத்தம் செய்துவிட வேண்டும்’ என்று முடிவு செய்தேன். வேறு சில வேலைகளின் நிமித்தம், தூய்மை பணியை தொடங்குவதில் சற்று தாமதம் ஆயிற்று.

அப்பொழுது மணி, கிட்டத்தட்ட பகல் 12.30 இருக்கும்.

“வெயில்லையா மொட்ட மாடிய கழுவ போற?” என்று அப்பா கேட்டார்.

Continue reading “மீக்குளிர் நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 21”

8 குறும்படம் விமர்சனம்

8 ‍- குறும்படம் விமர்சனம்

8 குறும்படம், ஆழமான நட்பு ஏமாற்றப்படும் பொழுது, கொல்லவும் செய்யும் விரக்தியை உடையது என்பதை விளக்குகிறது.

கொடூரமாகக் கொலை செய்யத் துடிப்பவளுக்கு ஆதரவாகப் பேசினால், உங்களுக்குப் பிடிக்குமா?.

குழந்தை சிலநேரம் பொம்மை கேட்டு அடம்பிடிக்கும். அதன்மேல் அலாதியான பிரியம் கொண்டு, ஆசை கொண்டு, எப்படியேனும் பொம்மையை வாங்கிவிட, மண்ணில் புரண்டு கூட அழும்.

ஆனால், கிடைக்காது எனத் தெரிந்ததும் விட்டு விடும். பாவம், குழந்தையென கொஞ்ச‌நேரம் கழித்து அந்தப் பொம்மையை வாங்கிக் கொடுத்தால், வேண்டா மெனத் தூரத் தூக்கி எறியும்.

Continue reading “8 குறும்படம் விமர்சனம்”

டெலி காலிங் – சிறுகதை

மகிழினி காலையில் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று மயங்கி விழுந்தாள்.

கீழே விழும்போது எதிரே இருந்த மேஜையில் தலைமோதி, முன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

அப்பா, அம்மா, தங்கை மூவரும் அலறி அடித்து ஓடிவந்து தூக்கினார்கள். மகிழினி பேச்சு மூச்சற்று கிடந்தாள்.

அக்கம் பக்க மனிதர்கள் எல்லாம் கூடி ஆம்புலன்ஸில் ஏற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

“அய்யோ, மகமாயி தாயீ, எம்புள்ளைக்கு என்னாச்சு? இந்த சின்ன வயசுலேயே உழைச்சு குடும்பத்தை காப்பாத்திற‌ என் தங்கத்துக்கு என்னாச்சு?” என தேம்பி தேம்பி அழுத மகிழின் அம்மா கனகத்தை சின்ன மகள் யாழினி தாங்கி பிடித்து கொண்டிருந்தாள்.

Continue reading “டெலி காலிங் – சிறுகதை”