நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்று கலியன் சவுரி ராஜப் பெருமாளை அழைக்கிறார்.

கலியன் என்பது திருமங்கை ஆழ்வாரின் பெயராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணபுர‌த்தில் உள்ள சவுரி ராஜப் பெருமாளை நீயும் கற்கலாம் தமிழை என்று அழைக்கிறார்.

Continue reading “நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்”

இணைய இதழ்கள் – ஓர் அறிமுகம் – பாரதிசந்திரன்

இணைய இதழ்கள் தமிழில் நிறைய உள்ளன. ஆனாலும் அவை நிறையப் பேருக்குத் தெரியாமல் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் ஐந்து அல்லது ஆறு இணைய இதழ்கள் பற்றி அறிந்து வைத்திருந்தாலே அதிகம்தான். நம்மைப் போன்றவர்களுக்கு, தமிழில் உள்ள இணைய இதழ்கள் பற்றி ஒரு நல்ல‌ அறிமுகம் கொடுக்கிறார் பாரதிசந்திரன்.

பாரதிசந்திரன் என்று இலக்கிய உலகில் புகழ் பெற்ற முனைவர் செ சு நா சந்திரசேகரன், இனிது இதழில் இணையம் அறிவோமா? என்ற தலைப்பில் வாரம் ஒரு தமிழ் இணைய இதழ் பற்றி எழுதிய தொடரின் கட்டுரைகள் இவை.

Continue reading “இணைய இதழ்கள் – ஓர் அறிமுகம் – பாரதிசந்திரன்”

உருளைக்கிழங்கு ரிங்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு ரிங்ஸ்

உருளைக்கிழங்கு ரிங்ஸ் வித்தியாசமான, சுவையான நொறுக்குத்தீனி வகையைச் சார்ந்தது.

சமோசா, பிஸ்கட், முறுக்கு, சாக்லேட் உள்ளிட்டவைகளைச் சாப்பிட்டு போரடிக்கும் போது இதனை செய்து உண்ணலாம்.

மாலை நேரங்களில் இதனை குழந்தைகளுக்குச் செய்து கொடுக்கலாம். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

Continue reading “உருளைக்கிழங்கு ரிங்ஸ் செய்வது எப்படி?”

காரைக்கால் அம்மையார் – எப்போதும் இறையடியில் பாடும் பேறு பெற்றவர்

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் எப்போதும் இறைவனின் திருவடியின் அருகில் இருந்து அவரைப் பாடும் அரும்பேற்றினைப் பெற்றவர். இறையருளால் மாய மாங்கனியை இருமுறை பெற்றவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூன்று பெண் நாயன்மார்கள் அடங்குவர். அவர்கள் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசியார் மற்றும் இசைஞானியார் ஆவர். இம்மூவருள்ளும் காரைக்கால் அம்மையாரே மூத்தவர்.

சிவாலயங்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளை வைத்திருப்பதைக் காணலாம். அவர்களுள் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த கோலத்திலும் ஏனையோர் நின்ற கோலத்திலும் அருளுவர்.

Continue reading “காரைக்கால் அம்மையார் – எப்போதும் இறையடியில் பாடும் பேறு பெற்றவர்”