மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டினை வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக‌ வழிநடத்திட வாழ்த்துக்கள்!

இயற்கையை நேசிப்போம்! இன்பமாய் சுவாசிப்போம்!!

இயற்கையை நேசிப்போம்

இயற்கை அன்னை நமக்கு பலவிதமான அன்பளிப்புகளைக் கொடுத்திருக்கிறாள்.

அந்த அன்னை தந்த பொருளை நாம் அன்பாக நேசிக்கிறோமா? பண்போடு பாதுகாக்கிறோமா? என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதுக்குப் பெயர்தான் உயிர்.

இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். பிறப்பு, வாழ்வு, முடிவு அனைத்தும் நாம் வாழும் நிலத்தில் நடப்பதை நாம் அறிவோம்.

Continue reading “இயற்கையை நேசிப்போம்! இன்பமாய் சுவாசிப்போம்!!”

பறக்காத பறவைகள்

பறக்காத பறவைகள்

பறக்காத பறவைகள் என்ற தலைப்பு உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். பறவைகளின் தனித்தன்மையே பறப்பதுதான். ஆனால் பறக்காத பறவைகளும் உலகில் இருக்கின்றன.

பறக்காத பறவைகள் ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகள், தென் துருவப்பகுதி, தென் அமெரிக்காவின் பாம்பஸ் புல்வெளி, ஆஸ்திரேலியாவின் காடுகள் மற்றும் நியூசிலாந்து தீவுகளில் காணப்படுகின்றன.

பொதுவாக பறவைகள் வேட்டையாடும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உணவினைத் தேடவும், தங்கள் சந்ததிகளைப் பாதுகாப்பாக வளர்க்கவும் பறக்கின்றன.

Continue reading “பறக்காத பறவைகள்”

முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்!

திக்கற்று நிற்கும் ஆசிரியர்களைக் காப்பாற்றுங்கள்!

பரிதவிப்பில் இருக்கிறார்கள்

தனியார் பள்ளி ஆசிரியர்கள்

Continue reading “முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்”