சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?

திருமணம்

பொதுவாகக் குடும்ப விழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுவும் திருமணம் தொடர்பாக முன்னும், பின்னும் நடைபெறும் நிகழ்ச்சிகள் இரு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பது. திருமணம் என்பது இரு குடும்பத்தினரின் சங்கமத் திருவிழா. Continue reading “சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?”

விநாயகர் யார்?

கணபதி

ஆதிமூலக் கடவுள், ஆனைமுகன், கணபதி, விக்னேஸ்வரன் எனப்போற்றப்படும் விநாயகர் பார்வதியின் புதல்வன் என அறியப்படுகிறார்.

ஒரு முறை சிவபெருமான் தவத்திற்கு சென்ற சமயத்தில், பார்வதி தேவி மஞ்சளை உருட்டி ஒரு மகனைச் செய்து அந்தப்புரத்தில் அச்சிறுவனை காவலுக்கு வைத்துவிட்டு தனது அனுமதியில்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டு குளிக்கச் சென்று விட்டார். அச்சிறுவன் தான் விநாயகர்.

சிவபெருமான் தவத்திலிருந்து திரும்பி, பார்வதி தேவியை பார்க்கும் நோக்கில் அந்தப்புரத்திற்கு செல்லும்போது விநாயகர், அன்னையின் அனுமதியின்றி யாரும் உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்துவிட்டார்.

அதனைக் கேட்டு சினம் கொண்ட சிவபெருமான், பார்வதி தேவியின் மகன் என்று அறியாது அச்சிறுவனுடன் சண்டையிட்டு முடிவில் சிறுவனின் தலையைக் கொய்துவிட்டார்.

உயிரற்ற விநாயகர் உடலைப் பார்த்த பார்வதி தேவி மிகவும் கவலையுற்றார். அதனைக் கண்ட சிவபெருமான், பார்வதி தேவியின் கவலையைப் போக்குவதற்காக, வடக்கு நோக்கி தலைவைத்து உறங்கும் சீவராசியின் தலையைக் கொய்து வருமாறு தனது பூதகணங்கங்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் வடக்கு நோக்கி தலைவைத்து உறங்கிய யானையின் தலையினை கொய்து வந்து சிவபெருமானிடம் தர, சிவபெருமான் உயிரற்ற விநாயகர் உடலில் அத்தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார்.

மேலும் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் போதும் விநாயகரை வழிப்பட்டுத் தொடங்க அக்காரியம் எந்தவிதமான தடங்கல் இன்றி செவ்வனே முடிவடைந்துவிடும் என்று அருளினார். இதுவே விநாயகர் வரலாறு என்று கூறுவர்.

 

உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 250 கிராம்

பூண்டு – 3 பல்;

வற்றல்தூள் – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லிதூள் – 1 தேக்கரண்டி

கரம்மசாலா – 1 தேக்கரண்டி Continue reading “உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி?”

விவிகா செய்வது எப்படி?

Idly

தேவையான பொருட்கள்

பச்சரிசி : 300 மி.லி.

கஞ்சிக்கு பச்சரிசி குருணை : 75 மி.லி.

வறுத்த பாசிப்பருப்பு : பிரியப்பட்ட அளவு போல் கொஞ்சம்

தேங்காய் : 1 Continue reading “விவிகா செய்வது எப்படி?”

பெண் சிசு

baby girl

பரந்த இவ்வுலகில் பெண் சிசு நான்வாழ இடமில்லை!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.
உணவு கூட கேட்கவில்லையம்மா ஒரே ஒருமுறை
உலகை பார்க்கத்தான் விரும்புகிறேன்;
அதற்கும் மறுக்கிறாயே!

– சுருதி

 

கூலி

குடும்ப சுமையை இறக்க ஏற்றினான்
அவன்முதுகில் சுமையை
நாளை விடியும் என்ற கனவில்!

– சுருதி

 

காலண்டர் (டிசம்பர் 31)

போகிப் பண்டிகை என நினைத்து
அனைத்தையும் துறந்து புதிய ஆடைக்காக
ஏங்கும் அழகிய பெண்!

– சுருதி

 

ஏழை

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறது அரசு
வீடே மரத்தடியில் தானே அதற்கு என்ன சொல்கிறது அரசு?

– சுருதி

 

கண்ணீரலைகள்

மனக் கடல் கொந்தளிக்கும் பொழுது
விழிக்கரையை தாண்டும் நீரலைகள் கண்ணீரலைகள்.

– சுருதி