சேமியா பால் ஐஸ் செய்வது எப்படி?

சேமியா பால் ஐஸ்

சேமியா பால் ஐஸ் கோடை காலத்துக்கு ஏற்ற உணவு ஆகும். இதனை வீட்டில் செய்து அசத்தலாம். வீட்டில் செய்யும்போது இதனுடைய சுவை கூடுவதோடு, தூய்மையான பொருட்களைப் பயன்படுத்துவதால் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.

சிறுவயதில் சேமியா ஐஸை தெருவில் விற்க வரும் ஐஸ்காரரிடம் வாங்கி உண்டுள்ளேன். இப்பொழுது சேமியா ஐஸை, நினைத்தவுடன் வீட்டிலேயே நாமே தயார் செய்து உண்ணும் பொழுது இன்னும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

Continue reading “சேமியா பால் ஐஸ் செய்வது எப்படி?”

குங்கிலியக்கலய நாயனார் – இறைவனை நேராக்கியவர்

குங்கிலியக்கலய நாயனார்

குங்கிலியக்கலய நாயனார் சாய்ந்திருந்த சிவலிங்கத் திருமேனியை தன்னுடைய அன்பு என்னும் பாசக்கயிற்றால் நேராக்கிய வேதியர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.

சிவனிடம் இவர் கொண்டிருந்த மாறாத பேரன்பினை அறிந்து கொள்ள இவருடைய வரலாற்றைத் தொடர்ந்து படியுங்கள்.

குங்கிலியக்கலய நாயனார் சோழ நாட்டில் அமைந்திருந்த திருக்கடவூர் என்னும் ஊரில் பிறந்தார். திருக்கடவூர் இன்றைக்கு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Continue reading “குங்கிலியக்கலய நாயனார் – இறைவனை நேராக்கியவர்”