விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஒன்பதாவது பாடலாகும்.

திருவாதவூரார் என்றழைக்கப்படும் மாணிக்கவாசகாரால், உயிர்களின் இயக்கத்திற்குக் காரணமான இறைவனான சிவபெருமானின் மீது திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.

Continue reading “விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா”

சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்

இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்

கொக்கு தலைவனும் இருன்டினிடேவும் கனலியின் கூட்டை வந்தடைந்தன. கூட்டில் கனலி இல்லை. ‘எங்க போயிருப்பாரு?’ என்று யோசித்தப்படியே அப்பகுதியை சுற்றி வந்தது கொக்கு தலைவன். இருன்டினிடேவும் ஆவலோடு காத்திருந்தது.

அப்பொழுது அங்கு வந்த அணில், “யார தேடுறீங்க?” என்று கொக்கைப் பார்த்து கேட்டது.

“இங்க கனலிய தேடி வந்தோம், எங்க போயிருக்காருன்னு தெரியுமா?” என்று கொக்கு கேட்டது.

Continue reading “சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்”

புத்தாண்டு எப்போது பிறக்கும்?

புத்தாண்டு எப்போது பிறக்கும்?

ஆங்கிலத்தின் முதல் திங்கள் வந்து விட்டால்

புத்தாண்டு பிறந்துவிடும்! உள்ளமோ குதூகலிக்கும்

கூடிப் பேசி வாழ்த்துச் சொல்ல மனம் துடிக்கும்

‘அலைபேசி, தொலைபேசி, மின் அஞ்சல்

Continue reading “புத்தாண்டு எப்போது பிறக்கும்?”

அரூ – நவீனத்தைத் தூக்கி நிறுத்தும்

அரூ

தமிழ் இணையஇதழ்களில் நவீனத்தைத் தூக்கி நிறுத்தும் மிகச்சிறந்த இணைய இதழ் அரூ ஆகும். இவ்விதழ் (aroo.space) மட்டும் படித்தாலே போதும். தமிழின் இன்றைய உயரம் தெளி(ரி)ந்து விடும். படிக்கப் படிக்க நீங்களும் இலக்கியத்தில் உயர்வீர்கள். தமிழும் உங்களோடு உயரும்.

அரூ – என்ன? எதற்கு? அவர்கள் மொழியில்…

”அரூ என்பது ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற அரூபமான மனித மனம்தான், அத்தனை மொழிகளையும், கலைகளையும், தத்துவங்களையும், உருவங்களையும் நமக்குத் தருவித்துத் தந்திருக்கிறது.

Continue reading “அரூ – நவீனத்தைத் தூக்கி நிறுத்தும்”