வாழ்த்துக்கள், கமலா ஹாரிஸ்!

கமலா ஹாரீஸ்

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தேர்வான முதல் பெண், முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் ஆகிய சிறப்புக்களைப் பெறும் கமலா ஹாரிஸ் அவர்களின் தாய் சியாமளா கோபாலன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.

தீபாவளி பரிசு – சிறுகதை

தீபாவளி பரிசு

“இந்த தீபாவளி பரிசு எனக்கு என்னென்னு தெரியுமா?” என்றான் மணி.

“என்ன புதுசட்டை, வெடி இதெல்லாம் தானே. இதுல என்ன பிரமாதம் இருக்கு?” என்றான் கனி.

“தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான இருக்கு. அதான் எங்கப்பா, நேத்தே புதுசட்டை, வெடி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்களே. அத்தோட தீபாவளி விருந்துக்கு வெள்ளாடு ஒன்ன வாங்கனும்முன்னு எங்கப்பா சொன்னாங்களே.” என்றான் மணி கெத்தாக.

Continue reading “தீபாவளி பரிசு – சிறுகதை”

சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி

கனலி சொன்ன செய்தி

தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்ட ஆடலரசு, நேராக கனலியின் கூட்டிற்கு சென்றது. அங்கு கனலி தியானத்தில் மூழ்கியிருந்தது. அதனால் எதுவும் பேசாமல் வாசலில் அமைதியாக நின்றது ஆடலரசு.

சில நிமிடங்கள் கடந்தன. கண்களை விழித்துப் பார்த்தது கனலி. வாசலருகில் ஆடலரசு அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

“உள்ள வா” என்று ஆடலரசுவை அழைத்தது கனலி.

Continue reading “சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி”

வள்ளுவரோடு சிறு ஊடல்

அறிவும் பண்பும்

வள்ளுவ,

உன் வாய்மையின் முரசினூடே

இந்தச் சின்னவனின் பெரு வணக்கம்

உன்மேல் எனக்கொரு சிறு சுணக்கம்!

நீ ஏன் மக்கட் பண்பிலா மானுடரை

மரம் போல்வர் என்றுரைத்தாய்?

Continue reading “வள்ளுவரோடு சிறு ஊடல்”

பிடிஎஃப் ட்ரைவ்.காம்

பிடிஎஃப் ட்ரைவ்.காம்

பிடிஎஃப் ட்ரைவ்.காம் (pdfdrive.com) பாதுகாக்கப்பட்டப் பன்னூல் நூலகம்.

அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில், பல கோடி நூல்களோடு காத்துக் கொண்டிருக்கிறது.

சில நூறு நூல்களைக்கூட வைப்பதற்கு இல்லங்களில் தற்காலத்தில் இடவசதியும், அதைப் படிக்கும் கால நேரங்களும் இல்லாத நிலையில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

Continue reading “பிடிஎஃப் ட்ரைவ்.காம்”