அதிமுக மற்றும் திமுகவின் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு தமிழ் நாட்டில் அரசியல் வெற்றிடம்

தமிழ்நாடு அரசு

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

அதிமுக மற்றும் திமுகவின் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு தமிழ் நாட்டில் அரசியல் வெற்றிடம் 

ஏற்பட்டுள்ளது : 78% (32 வாக்குகள்)

ஏற்படவில்லை : 22% (9 வாக்குகள்)

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பாஜகவை அதிமுக ஆதரித்தது

அதிமுக சின்னம்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பாஜகவை அதிமுக ஆதரித்தது

தவறு : 83% (40 வாக்குகள்)

சரி : 17% (8 வாக்குகள்)

 

அரசியலில் நேர்மை

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

அரசியலில் நேர்மை

சாத்தியம் : 50% (12 வாக்குகள்)

சாத்தியம் இல்லை : 50% (12 வாக்குகள்)

 

கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடும்போது என்னுடைய கருத்தை நான் சொல்லக் கூடாது என்பது எனது கட்டுப்பாடுகளில் ஒன்று.

நடுநிலை காக்க வேண்டிய கடமைதான் காரணம். அதைத் தாண்டி ஒரு சில வரிகள் இந்த வாரம் எழுத விரும்புகிறேன்.

அரசியல் என்பது பலருக்காக சிலர் உழைப்பது என்று இல்லாமல் சிலருக்காகப் பலர் உழைப்பது என்று இருக்கின்றது இன்றைய சூழல்.

நல்ல எண்ணம், நல்ல சொல் மற்றும் நல்ல செயல் உடையவர்கள் வாழத் தெரியாத இளிச்சாவாயர்கள் என்பதே இன்றைய பொதுப்புத்தி.

பொது வாழ்வில் நேர்மையாக இருக்க விரும்புபவர்கள் நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அவர்களால் குடும்பத்திற்காக முழுக்கவனத்துடன் உழைக்க முடியாது. குடும்பத்தினரிடம் நேரம் செலவழிக்க முடியாது.

பணம், பதவி மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் மீது விருப்பம் கொண்டுப் பலர் தப்பான வழியில் அவற்றை அடைய விரும்புகின்றனர். அவர்கள் பொது வாழ்வில் நேர்மையாக இருப்பவர்களை மிக எளிதாகத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

நல்லவனாக மட்டும் இல்லாமல் வல்லவனாகவும் இருப்பவர்களால்தான் பொதுவாழ்வில் நேர்மையாக இருக்க முடியும்.

கடந்த வாரக் கருத்துக் கணிப்புக் கேள்வியைத் தேர்வு செய்ததும் 25% பேர்தான் சாத்தியம் என்று சொல்வார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் சரி பாதிப்பேர் அரசியலில் நேர்மை சாத்தியம் என்று சொல்லி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

வாய்மையே வெல்லும் என்பது பொய்யல்லவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

–வ.முனீஸ்வரன்
இனிது ஆசிரியர்