சாமை காரக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சாமை காரக் கொழுக்கட்டை அருமையான சிற்றுண்டி வகையைச் சார்ந்தது. சாமை என்பது சிறுதானிய வகைகளுள் ஒன்று. ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.

பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

பிடி கொழுக்கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று. விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம். கையால் பிடித்து செய்யப்படுவதால் இக்கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது. இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று.

பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை கிராமப்புறங்களில் கோவில் திருவிழாவின் போது வீடுகளில் செய்யும் இனிப்புகளில் ஒன்று.

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை எங்கள் ஊரில் (முகவூர், இராஜபாளையம் தாலுகா, விருதுநகர் மாவட்டம்) பங்குனியில் கொண்டாடப்படும் அம்மன் கோவில் திருவிழாவின் போதும், சித்திரை வருடப்பிறப்பின் போதும் செய்து வழிபாட்டில் படைக்கப்படுகிறது. இந்த மாதத்தில்தான் பனை மரத்திலிருந்து புதிதாக குறுத்தோலை கிடைக்கும். புதிய பச்சரிசி, புதிய கருப்பட்டி, புதிய குறுத்தோலை ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் கொழுக்கட்டையானது மணமாகவும், மிகவும் ருசியாகவும் இருக்கும்.

தினை கொழுக்கட்டை (இனிப்பு) செய்வது எப்படி?

தினை கொழுக்கட்டை சத்து நிறைந்ததும், சுவையானதும் ஆகும். தினை அரிசி பழங்காலத்திலிருந்தே நம்முடைய புழக்கத்தில் இருந்துவரும் அரிசி வகைகளுள் ஒன்று.