முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

முட்டை கொத்து பரோட்டா

முட்டை கொத்து பரோட்டா அசைவப் பிரியர்களின் விருப்ப உணவாகும். பரோட்டா கடைகளில் முட்டை கொத்து பரோட்டா தயார் செய்வதை பரோட்டாவை கொத்தும் சத்தத்தை வைத்து தூரத்திலிருந்தே அடையாளம் காணலாம்.

வீட்டிலும் இதனை தயார் செய்து குழந்தைகளைக் குஷிப் படுத்தலாம். வீட்டில் இதனைத் தயார் செய்யும் போது குறைவான விலையில் அதிக அளவில் பெற இயலும்.

Continue reading “முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?”

மசாலா டீ செய்வது எப்படி?

மசாலா டீ
மசாலா டீ அருமையான சூடான பானம் ஆகும். இதனை வடநாட்டில் மசாலா சாய் என்றும் அழைப்பர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மசாலா டீ சாப்பிட்டிருக்கிறேன். அது மிகவும் அருமையாக இருந்தது.

மசாலா டீயில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியவை. வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ இதனைச் செய்து அருந்தலாம்.

Continue reading “மசாலா டீ செய்வது எப்படி?”

கருப்பு உளுந்து புட்டு செய்வது எப்படி?

கருப்பு உளுந்து புட்டு

கருப்பு உளுந்து புட்டு ஆரோக்கியமான, அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சிற்றுண்டி ஆகும். இதனை குழந்தைகளுக்கு இடைவேளை உணவாக செய்து கொடுக்கலாம்.

கருப்பு உளுந்து எலும்புக்கு வலு சேர்க்கும். ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Continue reading “கருப்பு உளுந்து புட்டு செய்வது எப்படி?”

வாழைப்பூ சூப் செய்வது எப்படி?

வாழைப்பூ சூப்
வாழைப்பூ சூப் ஆரோக்கியமான சூப் ஆகும். வாழைப்பூவினை சுத்தம் செய்து சமைக்க நேரமாகும் என்பதால், நம்மில் பலரும் இதனை ஒதுக்கி விடுவது உண்டு. ஆனால் சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவினை நம் உணவில் அடிக்கடி சேர்ப்பது உடல்நலத்திற்கு மிகவும் சிறந்தது.

வாழைப்பூவினை சுத்தம் செய்யும் போது உள்ள வெள்ளை மடல் பகுதிகளை வீண் செய்யாமல் சூப் தயார் செய்து அருந்தலாம்.

துவர்ப்பு சுவையை உணவில் சேர்ப்பது அவசியம். அதற்கு வாழைப்பூவினை உணவாகப் பயன்படுத்தலாம்.

வாழைப்பூவினைக் கொண்டு வாழைப்பூ குழம்பு, வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை உள்ளிட்ட உணவுகளைத் தயார் செய்யலாம்.

இனி எளிய முறையில் சுவையான வாழைப்பூ சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Continue reading “வாழைப்பூ சூப் செய்வது எப்படி?”

கருப்பு உளுந்து வடை செய்வது எப்படி?

கருப்பு உளுந்து வடை

கருப்பு உளுந்து வடை சுவையான வடை ஆகும். இது ஆரோக்கியமானதும் கூட. இந்த வடை செய்வதற்கு கருப்பு உளுந்து பயறு பயன்படுத்தப்படுகிறது.

இவ்வடைக்கு நார்ச்சத்து மிகுந்த தோலுடன் கூடிய உளுந்து பயன்படுத்தப்படுவதால் குறைந்தளவு சாப்பிடதும் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.

Continue reading “கருப்பு உளுந்து வடை செய்வது எப்படி?”