வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?

வாழைத்தண்டு சட்னி

வாழைத்தண்டு சட்னி ருசியான சட்னி வகை ஆகும். இது இட்லி, தோசை, சப்பாத்தி, சுடுசாதம் எல்லாவற்றிற்கும் பொருத்தமானது.

வாழைத்தண்டு உடலுக்கு ஆரோக்கியமானது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் உண்டாக்கும்.

வாழைத்தண்டினைக் கொண்டு சூப், வாழைத்தண்டு கூட்டு, பொரியல், வாழைத்தண்டு 65 உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.

Continue reading “வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?”

லெமன் ஜூஸ் செய்வது எப்படி?

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ் கொளுத்தும் கோடை காலத்துக்கு ஏற்ற அருமையான சாறு வகைப் பானம். இது உடலின் பி.எச் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான நீர்ச்சத்தை ஈடுசெய்ய இதனை அடிக்கடி தயார் செய்து உண்ணலாம்.

மேலும் எலுமிச்சை ஜூஸில் உள்ள விட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது.

எலுமிச்சை பழம் ஏனையப் பழங்களைவிட விலை குறைந்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுவதால் இதனை எல்லோரும் வாங்கி பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு தயார் செய்யும் முறையும் எளிது.

Continue reading “லெமன் ஜூஸ் செய்வது எப்படி?”

வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி?

வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டு கூட்டு அருமையான தொட்டுக்கறி ஆகும். இது சுவை மிகுந்ததும், ஆரோக்கியமானதும் ஆகும். இதனை எளிதாகச் செய்யலாம்.

வாழைத்தண்டினை சுத்தம் செய்வது சிரமம் என்பதால் இதனை பலரும் ஒதுக்கி விடுவர். ஆனால் அது உடலுக்கு மிகவும் நன்மை பயப்பது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வாழைத்தண்டின் கடினமான வெளித்தோல்களை நீக்கிவிட்டு மென்மையான உள்பகுதியை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

Continue reading “வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி?”

கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?

கொள்ளு மிளகு பொடி

கொள்ளு மிளகு பொடி சுவையான பொடி வகை ஆகும். இதனை சுடுசாதத்தில் நெய்யுடன் சேர்த்து உண்ண சுவை மிகும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் இதனை தொட்டுக் கொள்ளலாம்.

கொள்ளு உடலுக்கு வலிமையைத் தருவதுடன் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலினை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கொள்ளினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம் ஆகம்.

Continue reading “கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?”

காராமணி / தட்டைபயறு குழம்பு செய்வது எப்படி?

காராமணி / தட்டைப்பயறு குழம்பு

காராமணி / தட்டைபயறு குழம்பு எளிதில் செய்யக்கூடிய சுவையான குழம்பு ஆகும். இதற்கு காராமணி எனப்படும் தட்டைப் பயறு பயன்படுத்தப்படுகிறது.

நார்ச்சத்து நிறைந்த இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

இதனை சாதம், சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். காரடையான் நோன்பின் போது அம்மனுக்குப் படைக்கப்படும் இனிப்பு அடை, உப்பு அடை இரண்டிலும் காராமணி சேர்த்து செய்யப்படுகிறது.

Continue reading “காராமணி / தட்டைபயறு குழம்பு செய்வது எப்படி?”