தமிழில் பேசுவோம்

தமிழ்

என் நண்பர் ஒருவருக்கு பிரபல வங்கி ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசிய பெண் ஆங்கிலத்தில் பேசியிருக்கின்றார்.
நண்பர் தமிழில் பேசினார்.

அந்தப் பெண் அவரிடம் ஆங்கிலத்தில், “சார், நீங்க பேசுறது எனக்குப் புரியவில்லை; எந்த மொழியில் உங்களுடன் பேச வேண்டும்” என்று கேட்டிருக்கின்றார்.

அவர் “தமிழில் பேசலாம்” என்று சொன்னார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அவருக்கு தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் மூன்றும் நன்றாகவே தெரியும். Continue reading “தமிழில் பேசுவோம்”

எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?

இந்தி

முதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

தமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்  தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது. எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா? என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது. Continue reading “எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?”

சித்திரை வந்தாள்

சித்திரை வந்தாள்

எங்கெங்கும் சக்தியை தந்திட என்றே
சித்திரையும் வந்தாள் – அவள்
என்னென்று ஏதென்று கேட்டிடும் முன்னே
அத்தனையும் தந்தாள் – செல்வம்
அத்தனையும் தந்தாள் Continue reading “சித்திரை வந்தாள்”

சித்திரை சிறப்புகள்

தமிழ் புத்தாண்டு

சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. Continue reading “சித்திரை சிறப்புகள்”