பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்

பயிர் சுழற்சி

பயிர் சுழற்சி பராம்பரியமாக நம்முடைய நாட்டில் வேளாண்மையில் பின்பற்றும் ஓர் நடைமுறையாகும். இம்முறையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.

பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு வகையான பயிர்களை வெவ்வேறு வகையான காலநிலைகளில் பயிர் செய்யும் முறையைக் குறிக்கும். Continue reading “பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்”

கட்டுப்பாடு காப்பாற்றும்

கோழிக்குஞ்சு மஞ்சு

கட்டுப்பாடு காப்பாற்றும் என்பதை இந்த சிறுகதை மூலம் உணர்ந்து கொள்வோம்.

மலர்வனம் என்ற காட்டின் அருகே கோழி கோமு தன்னுடைய ஐந்து குஞ்சுகளுடன் வசித்து வந்தது.

கோழி கோமு தனது குஞ்சுகளிடம் “என் அருமைக் குழந்தைகளே, காக்கை, கழுகு, பருந்து, நரி ஆகியவற்றிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.” என்றது.

“அவைகள் நம்மை உணவாக உட்கொள்ளக் கூடியவை. ஆதலால் நீங்கள் அவைகளை கண்டாலோ, குரலினைக் கேட்டாலோ ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும்.” என்று அவ்வப்போது அறிவுரை கூறிக் கொண்டே இருந்தது.

அது தனது குழந்தைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்குமாறு பார்த்துக் கொண்டது. Continue reading “கட்டுப்பாடு காப்பாற்றும்”

விடை இலச்சினை இட்ட படலம்

இடப முத்திரை

விடை இலச்சினை இட்ட படலம் இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான சோழனுக்காக திருகோவிலைத் திறந்து தரிசனம்தந்து மீண்டும் கோவிலை அடைத்து இடப முத்திரை இட்டதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “விடை இலச்சினை இட்ட படலம்”

பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்

பாசி பயறு

பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.

ஆனால் அது உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதே நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. எனவே இது உணவே மருந்தான பொருளாகும். Continue reading “பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்”