ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

 

ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்!

அவனிருக்கும் தெருவெல்லாம் ஆடிபாடி சிரிக்கனும்!

மூஞ்சுறுன்னு எலிவாகனம் அதுக்குஎன்ன கொடுக்கனும்!

முற்றாத தேங்காயை உடைச்சுஅதுக்கு வைக்கனும்!

 

வண்ணவண்ண தோரணங்கள் தெருத்தெருவா கட்டனும்!

வாடாத அருகம்புல்லில் மாலைகட்டி சூட்டனும்!

கண்ணங்கருத்த யானை அவனதோளில் சுமக்கனும்!

கடைசியாக பச்சரிசி கொழுக்கட்டைய திங்கனும்!

 

தந்தம்ஒன்று உடைஞ்சதுக்கு காரணத்தை கேட்கனும்!

தரதரவென இழுத்துஅவன நடுவீதியில நிறுத்தனும்!

முந்தையநம் வினைகளையே தீர்த்திடத்தான் கேட்கனும்!

முழுநீள கரும்பெடுத்து அவனுக்கென்று படைக்கனும்!

 

சந்தனமும் சவ்வாதும் தெருமுழுக்க மணக்கனும்!

சந்தியில பொங்கலிட்டு ஊருக்கெல்லாம் கொடுக்கனும்!

கந்தனுக்கு மூத்தவனை கண்மூடி துதிக்கனும்!

காலம்முழுதும் குறைவின்றி அவனருளை கேட்கனும்!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

பிள்ளையார் வழிபாட்டுப் பாடல்கள்

பிள்ளையார்

பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். எல்லாத் தெருக்களிலும் அவரைக் காணலாம். அவரை வணங்க சில பாடல்கள்.

Continue reading “பிள்ளையார் வழிபாட்டுப் பாடல்கள்”