பவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்

பவளப் பாறைகள்

பவளப் பாறைகள் கடலின் அடிப்பரப்பில் காணப்படும் அழகான சூழலமைப்பு ஆகும். இவை கடலடித் தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பல்வகை உயிர்சூழல் உருவாகவும், அவை பாதுகாப்பாக இருக்கவும் இவை மிகவும் அவசியமானவை.

இவை மஞ்சள், பச்சை, ஊதா, சிவப்பு உள்ளிட்ட கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்களில், தேன்கூடு, மரம், மாபெரும் விசிறிகள், மூளை, மான் கொம்புகள் போன்ற வடிவங்களில் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

Continue reading “பவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்”

அலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்?

அலையாத்திக் காடுகள் அவசியம் ஏன்?

அலையாத்திக் காடுகள் ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள்.

கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மையை உடையதால் இவை அலை ஆத்திக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆத்துதல் என்பதற்கு மட்டுப்படுத்துதல் அல்லது குறைத்தல் என்பது பொருளாகும்.

இவை உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடலோரப் பகுகளில் மட்டும் காணப்படுகின்றன. புவியில் உள்ள முக்கியமான சூழல் அமைப்புகளில் இதுவும் ஒன்று.

Continue reading “அலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்?”

உலகின் டாப் 10 மழைக்காடு

நியூகினியா மழைக்காடு

உலகின் டாப் 10 மழைக்காடு பற்றிப் பார்ப்போம். மழைக்காடுகள் அதிகளவு ஆக்ஸிஜனை வழங்குவதால் உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.

இவை சுற்றுசூழலுக்கு அவசியமான முக்கியமான உயிர்தொகுதியாக உள்ளன. உலகின் 50 சதவீத உயிரினங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன.

வானிலை மற்றும் சுற்றுசூழலின் வெப்பநிலை கட்டுப்பாட்டாளர்களாக மழைக்காடுகள் விளங்குகின்றன.

Continue reading “உலகின் டாப் 10 மழைக்காடு”

இந்தியாவின் பீடபூமிகள்

பாகல்கண்ட் பீடபூமி

இந்தியாவின் பீடபூமிகள் அதன் மொத்த பரப்பளவான 32 லட்சம் சதுர கிமீ-ல் 16 லட்சம் சதுர கிமீ பரப்பளவினை கொண்டுள்ளன. இங்குள்ள பீடபூமிகளின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 600-900 மீட்டர் ஆகும்.

இந்தியாவில் பொதுவாக ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன. இது பொதுவான சாய்வைக் குறிக்கிறது.

நர்மதை, தபதி, மாஹி ஆகியவை கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.

இந்தியாவின் பீடபூமிகள் பூமியில் உள்ள பழமையான நிலவமைப்பு ஆகும். இது பெரும்பாலும் ஆர்க்கியன் கெய்னிஸ் மற்றும் ஸ்கிஸடுகளால் ஆன மிகவும் நிலையான தொகுதி ஆகும். Continue reading “இந்தியாவின் பீடபூமிகள்”

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு

நீந்தும் வாத்து

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை

1. நிலவாழ் விலங்குகள்

2. நீர்வாழ்விலங்குகள்

3. இருவாழ்விகள்

4. மரங்களில் உள்ள விலங்குள்

5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும். Continue reading “வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு”