நீர் வாழிடம் – நீருடன் ஓர் உரையாடல் – 29

கடந்த இரண்டு நாட்களாகவே, அவ்வப்பொழுது பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.

அன்று மழை சற்றே ஓய்ந்த நிலையில் நான் வெளியே வந்தேன்; வானத்தைப் பார்த்தேன். கார்மேகக் கூட்டங்கள் இன்னமும் அகலவில்லை. தெருவீதியை பார்த்தேன்; மழைநீர் தேங்கியிருந்தது.

வீட்டின் மதில் சுவரில் பல நத்தைகள் ஏறி ஒட்டிக் கொண்டிருந்தன. உடனே தேங்கிக் கொண்டிருந்த, மழை நீரை பார்த்தேன்.

Continue reading “நீர் வாழிடம் – நீருடன் ஓர் உரையாடல் – 29”

காசிம் குறும்படம் விமர்சனம்

காசிம்

நண்பனின் உண்மைத்தன்மை எப்படிப்பட்டது என விளக்குகின்ற, நட்பின் இலக்கணம் கூறும் மிக அற்புதமான படம் காசிம் குறும்படம் ஆகும்.

சினிமா வாய்ப்புத்தேடி சென்னை செல்லும் ஒரு சராசரி இளைஞர் தான் நாகராஜ்.

அவர் தங்குவதற்கும் உணவுக்கும் கஷ்டமில்லாமல் இருக்க‌, ஒரு உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா வாய்ப்பைத் தேடுகிறார்.

அந்த உணவகத்தில் பாத்திரங்கள் கழுவுவதற்கும், காய்கறிகள் வெட்டுவதற்கும் கல்கத்தாவிலிருந்து வந்த காசிம், அவரிடம் நட்பாய் பழகுகிறான்.

Continue reading “காசிம் குறும்படம் விமர்சனம்”

இன்னும் கொஞ்சம் படி – படிப்பது எப்படி?- பாகம் 6

இன்னும் கொஞ்சம் படி

என்ன சார், நீங்க படிக்க ஆரம்பிக்கச் சொன்னீங்க!

எதையெதையோ தள்ளுபடி பண்ணச் சொன்னீங்க!

படி அப்படின்னு சொன்னீங்க!

அப்புறம் மறுபடியும் படியென்று சொன்னீங்க!

இப்ப என்னன்னா இன்னும் கொஞ்சம் படி எனத் தலைப்பு போடுறீங்க!

இப்படி படி! படி! என்று சொல்லிச் சொல்லி, திரும்பத் திரும்ப நீங்கள் ஆசிரியர் என்பதனை எங்களுக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என நீங்கள் நினைப்பது எனக்குத் தெரியும்.

Continue reading “இன்னும் கொஞ்சம் படி – படிப்பது எப்படி?- பாகம் 6”

பயந்தாங்கொள்ளி நகர் – சிறுகதை

பயந்தாங்கொள்ளி நகர்

‘பயந்தாங்கொள்ளி நகர்’ என்ற அந்த ஊரின் பெயர்ப் பலகையைப் பார்த்ததும் எங்களுக்கே உதறல் எடுக்க ஆரம்பித்தது.

‘வீரமுரசு’ பத்திரிகை நிருபர்களான நாங்கள், தீபாவளி சிறப்பிதழுக்காக ஊர் ஊராய் அலைந்து வித்தியாசமான செய்திகளைத் திரட்டிக் கொண்டிருந்தோம்.

“சார் இந்த ஊர்ல என்ன பெரிய நியூஸ் இருக்க போகிறது?” – எங்களில் ஒருவர் கேட்டார்.

“இந்த தீபாவளி சிறப்பிதழில் கவர் ஸ்டோரியே இந்த ஊரைப் பற்றித்தான். அட்டகாசமான சப்ஜெக்ட் கிடைச்சிருக்கு. தைரியமா வாங்க. ஊருக்குள்ள போய்ப் பார்ப்போம்.” என்றேன்.

Continue reading “பயந்தாங்கொள்ளி நகர் – சிறுகதை”

சௌ சௌ கிரேவி செய்வது எப்படி?

சௌ சௌ கிரேவி

சௌ சௌ கிரேவி அசத்தலான சைடிஷ். சப்பாத்தி, தோசை, இட்லி மற்றும் வெள்ளை சாதம் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

இதனுடைய மணமும் சுவையும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். விழாக் காலங்களிலும் விருந்தினர் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.

Continue reading “சௌ சௌ கிரேவி செய்வது எப்படி?”

கணநாத நாயனார் – சம்பந்தரை வணங்கி கையிலையை அடைந்தவர்

கணநாத நாயனார்

கணநாத நாயனார் பழம்பெரும் புகழ் பெற்ற தலமான சீர்காழியில் பிறந்த வேதியர். அவர் சீர்காழியில் வாழ்ந்த வேதியர்களுக்குத் தலைவராகவும், அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார்.

Continue reading “கணநாத நாயனார் – சம்பந்தரை வணங்கி கையிலையை அடைந்தவர்”

எழுத்தாளர்கள்

இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் நமக்குக் கொடுத்து, இனிது ஓர் இதழாக உருப்பெறுவதற்கு உதவினார். எனவே அவரை முதல் எழுத்தாளராக அட்டவணையில் இடம் பெறச் செய்கிறோம். மற்ற அனைவரையும் அகர வரிசையில் இடம் பெறச் செய்கிறோம். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்புகளைப் படிக்க அந்த எழுத்தாளரின் பெயரை சொடுக்கவும்.

இராசபாளையம் முருகேசன்

Continue reading “எழுத்தாளர்கள்”

படைப்புகளை வரவேற்கிறோம்

படைப்புகளை வரவேற்கிறோம்

உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

நீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்கலாம்; அல்லது இதுவரை எதுவுமே எழுதாதவராக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் சரி, மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்து உங்களிடம் இருந்தால், இனிது இதழ் உங்களை எழுதத் தூண்டுகிறது. Continue reading “படைப்புகளை வரவேற்கிறோம்”