வறுமையிலும்
பிறர்க்கு
இல்லையென்று
சொல்லாள்
நல்ல இல்லாள்
அன்பால்
மனதை தைக்கும்
தையல்
அந்த தையல்
பகிர்ந்து உண்பதில்
காகத்தின் தங்கை
அந்த நங்கை
குடும்பப்
பல்கலைக்கழக
வேந்தர்
அந்த மாந்தர்
உலகம் சொல்லும்
கல்வி இல்லையெனினும்
உலகை வெல்லும்
பண்பால் உயர்ந்த
மேதை அந்த
கோதை
பெற்றோர் வீடு
ஒரு கண்ணாகவும்
கையில் தன்னை
பெற்றோன் வீடு
ஒரு கண்ணாகவும்
எட்டி நின்றே
கிட்டிச் சேர்ப்பாள்
அந்த மெட்டி
அணிந்தவள்
வார்த்தையால்
எத்தனைபேர்
சுட்டெறித்தாலும்
தட்டியெறிந்து விட்டு
சிறகு தட்டி
பறப்பதில்
கெட்டிக்காரர்கள்
இந்த
ஃபீனிக்ஸ் பெண்கள்
– ஆர்.இந்துஜா
மறுமொழி இடவும்