அகதி – கவிதை

உன்னை என் நாடு என்கிறேன்

என் எதிர்காலம் இங்கு தானென்கிறேன்.

என் பழங்காலத்தை விசாரித்து

பகைவனாக்கப் பார்க்கையில்

பாதிக்கப்பட்ட நான்

வில‌கும்போது

அகண்ட பாரதமே

உன் எல்லைகள்தான்

குறுகிப் போகின்றதென்பது

உனக்குத் தெரியவில்லையா?

பத்மினி