பூர்வஜென்மத்தில் செய்த நன்மை, தீமைகளை பொறுத்து, தன் வாழ்நாளில் சில நல்ல காரியங்களை செய்து பெயரும், புகழும் பெறுகிறான் மனிதன்.
ஒருவன் எவ்வளவோ தான, தர்மங்களை செய்யலாம், பரோபகாரியாக இருக்கலாம், இதெல்லாம் அவனுக்கு புண்ணியத்தை சேர்க்கும். ஆனால் தான் செய்துள்ள தான தர்மங்களைப் பற்றி பிறரிடத்தில் தற்பெருமை பேசிக் கொண்டு தற்புகழ்ச்சி செய்து கொள்வது அவன் செய்துள்ள தான, தர்மத்தின் பலனைக் கெடுத்துவிடும்.
நல்ல காரியங்களை செய், புண்ணியம் சம்பாதித்துக் கொள், புண்ணியலோகங்களை ஜெயித்துக் கொள் ஆனால் தற்பெருமை, அகம்பாவம் வேண்டாம். இவைகளை விட்டு விட்டால் ஒருவன் எல்லா நற்பலன்களையும் பெறலாம்.