புள்ளிகளாய் உள்ள என் வாழ்வில் கோலமிட
நீ வருவாயா?
ஓடும் நதியாய் நாணிருக்க நீந்திச் செல்லும் படகாய்
நீ வருவாயா?
என்றுதானே கேட்டேன் – அவளோ
என் கன்னத்தில் கோலமிட்டு
என் வீட்டில் புயலை உருவாக்கி
என்னைப் படகாய் நீந்தவிட்டு சென்றுவிட்டாள்
காந்தி சொன்ன அகிம்சை ஏன் மறந்தாள்?
– ஸ்ருதி