அகிலம் முழுதும் அன்பு பூக்கவே
அனைவர் வாழ்வும் செழிக்குமே
இன்னல் அனைத்தும் நீங்குமே
இன்பம் எங்கும் நிறையுமே
அகிலம் முழுதும் அன்பு பூக்கவே
அனைவர் வாழ்வும் செழிக்குமே
இதயத்தில் ஈரம் தோன்றவே
உதய மாகும் நல்வாழ்வே
வாழ்வோம் வாழவைப்போம் என்றே
நல்லெண்ணம் தோன்றும் மனதிலே
அகிலம் முழுதும் அன்பு பூக்கவே
அனைவர் வாழ்வும் செழிக்குமே
பகிர்ந்து கொண்டால் உடனே
பாதியாகக் குறையும் துன்பமே
பலமடங்காய்ப் பெருகிடுமே
பகிரும் நம்வாழ்வின் இன்பமே
அகிலம் முழுதும் அன்பு பூக்கவே
அனைவர் வாழ்வும் செழிக்குமே
எல்லோரும் இணைந்து செயல்பட்டாலே
ஏற்றம் வரும் தன்னாலே
கவலைகள் நம்மை விட்டு ஓடவே
கடையனுக்கும் கடைத்தேற்றமே
அகிலம் முழுதும் அன்பு பூக்கவே
அனைவர் வாழ்வும் செழிக்குமே
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்