பலமிக்க யானையை
மதம் பிடிக்காது காக்க
அங்குசமே ஆயுதமாம்…
பலசாலிதான் யானை என்றாலும்
அது அங்குசத்தின் அடிமைதானே!
அடிமைகள் ஒரு போதும்
தலைவனாக முடியாது
அங்குசத்தை ஆயுதமாய்
எவன் ஏந்தி வருகிறானோ
அவனே தலைவன்!
அடிமையாக்கும் கருவிகளை(பழக்கங்களை)
ஆயுதமாக்கும் வித்தைகளை
கற்றுணர நமக்கு தேவை
நல்ல நல்ல புத்தகங்கள்!
புத்தகங்கள் வாசிக்கும் பொழுதெல்லாம்
புதுக்காற்றை நாம் சுவாசிப்போம்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!