ஒவ்வொரு விடியலும் நம் வீதியும் குளிக்கும்
புதுபுது கோலங்கள் தானே முளைக்கும்
சாணிப்பாலில் தெருவே மணக்கும்
சாக்கடை நீரும் ஓடிக் களிக்கும்
வீணே திரியும் கொசுக்கள் மறையும்
இரவு படுக்கை வாசலில் கிடக்கும்
நிலவொளி போர்வையில் ஊரும் அடங்கும்
நாய்கள் மட்டும் நடு வீதியில் நடக்கும்
இப்படியாக இருந்திட்ட சொர்க்கம்
அடுக்கு மாடிக்குள் அமிழ்ந்தது ஏனோ?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942