ஒரு குடையில் நீ செல்ல
உன்னுடனே என் மனம் செல்ல
கருமேக கூட்டம் கூடி காண்கிறதே
என் செய்ய?
அருகில் நீ இருக்கையிலே
அடைமழைதான் எனக்குள்ளே!
சிறுபொழுதே ஆனாலும்
சிறகடிக்கும் துடிப்பென்ன?
குறுஞ்சிரிப்பை நீ உதிர்க்க
கோடி மின்னல் அதை தடுக்க
வருகின்ற காட்சி என்ன?
வாழ்வினில் இதற்கு ஈடென்ன?
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்