அண்ணாமலையானைத் தொழலாமே – தா.வ.சாரதி

அண்ணாமலைப் பெம்மான்

உறையும் திருக்கோயில்

உண்ணாமலையோடு எம்மான் மகிழ்வோடு

மண்ணின் அருமைந்தர்

நம்மைக் காக்கும் உமையானை

எண்ணித் திருப்பாதம் நினைந்துத் தொழலாமே…

சடையார் முடியானை அடைந்தால் இருளோடும்

தடையாவும் தகர்ந்தோடும் இனிதே இனித்தேறும்

நடமாடும் எழிலீசன் ஒளிவான வடிவாக

அடியார் மனம்சேர்ந்த மலையானைத் தொழலாமே…

பிறை சூடிய மதியானை திருநீறு அணிந்தானை

இறை சூழ்ந்த மலையானை வலம் சூழ,

குறையாவும் பறந்தோட, அருள் சேர,

நிறைவான வாழ்வாக

அண்ணாமலையானைத் தொழலாமே

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்