காரிருள் பணி முடிய
காலைப் பொழுது மலர்ந்திட
பகலவன் பளிச்சிட்டான்
விடிந்து விட்ட போதிலும்
படுக்கையிலே படுத்திருந்தான் சின்னத் தம்பி
அண்ணன் வந்து எழுப்பி விட்டான்
அவனைப் போடா என்று தள்ளி விட்டான்
விடிந்த பின்பு தூங்கக் கூடாது
நான் படித்த செய்தி கேள் என்றான் அண்ணன்
என்ன சொல்லு என்றான் சின்னத் தம்பி
அண்ணன் சொல்ல ஆரம்பித்தான்
சூரியனின் ஒளிக்கதிர்கள்
உலகை வந்து சேர்ந்த பின்னே
உறக்கந் தரும் சுரப்பிகளும்
உள்ளடங்கி போகிடுமாம்
தொடர்ந்து நாமும் உறங்கிடவே
சுரப்பிகள் நிலை குழம்பிடுமாம்-இதனால்
இன்னல் வந்து சேர்ந்திடவே
இரும்பு உடலும் கெட்டுடுமே
சங்கடங்கள் பார்க்காமல்
வேளைக்கு கண் உறங்கி
அதிகாலையில் கண்விழித்தால்
ஆரோக்கியம் பேணிடலாம்
அண்ணன் சொன்ன செய்தி கேட்டு
சின்னத்தம்பி திடுக்கிட்டான் உடனே
படுக்கை விட்டு எழும்பிட்டான்
அண்ணனிடம் உறுதியாய்ச் சொன்னான்
இனிமேல் தினமும் நான்
இரவில் சரியான வேளையில் தூங்குவேன்
அதிகாலையில் எழுவேன்
ஆரோக்கியமாய் வாழுவேன்
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com
கைபேசி: +91 9941633807