அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன நடக்கும்?

அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன நடக்கும்?

அதிகப்படியான நேரம் உட்கார்ந்தே இருப்பது நாள்பட்ட நோய்களின் அபாயத்தை வெகுவாக அதிகரிக்கிறது.

நமது உடல் இயற்கையில் இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் இயக்கமின்றி (செயலற்ற) இருப்பது உடலியல் செயல்முறைகளை சீர்குலைக்கிறது.

தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைகின்றன. மேலும் மன நலனுக்கும் கூட இது தீங்கு விளைவிக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் மூலம் மிகவும் ஏற்படும் மிகவும் முக்கிய விளைவுகளில் ஒன்று இதய நோய்.

உட்கார்ந்திருப்பது இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பை உடைக்கும் நொதிகளின் செயல்பாட்டைக் குறைக்கிறது.

இதனால் நல்ல கொழுப்பின் அளவு குறைத்து, ஆரோக்கியமற்ற கொழுப்பின் ஒரு வகை டிரைகிளிசரைடுகளை உருவாக்க வழிவகுக்கிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதற்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும் இடையே தெளிவான தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் தீங்கான விளைவுகளில் இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு சீர்குலைவதும் அடங்கும்.

நாம் உட்கார்ந்திருக்கும் போது நமது தசைகள் இரத்த ஓட்டத்தில் இருந்து குளுக்கோஸை தீவிரமாக எடுத்துக் கொள்ளவதில்லை. இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். இது இரண்டாவது வகை நீரிழிவு நோயின் முன்னோடியாகும்.

நாம் எவ்வளவு நேரம் உட்காருகிறோமோ, இன்சுலினின் உணர்திறன் அவ்வளவுக்கு குறைந்துவிடும். இதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது உடலுக்கு கடினமாகிறது.

உட்கார்ந்திருப்பது நமது தசை எலும்பு அமைப்பிலும் அழிவை ஏற்படுத்துகிறது. மனித முதுகெலும்பு நீண்ட நேரம் வளையாமல் இருப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை.

உட்கார்ந்திருக்கும்போது மோசமான தோற்ற அமைவு ஏற்படும். முதுகு வளைந்து, தோள்கள் தொங்கிப் போகும்.

தண்டுவட முள்ளெலும்பு இடைவட்டு மற்றும் தசைநார்கள் பாதிக்கப்படும். இது நாள்பட்ட முதுகுவலி, கழுத்து வலி மற்றும் நரம்பு பாதிப்புக்கு கூட வழிவகுக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது நமது உடலின் சரியான தோற்ற அமைவு மற்றும் நிலைத்தன்மைக்கு அவசியமான மைய தசைகள் பலவீனப்படுகிறது.

வலுவற்ற மைய தசைகள் காரணமாக முதுகுவலி பிரச்சனைகள் உண்டாகும். முதுகுத்தண்டு பகுதியில் காயங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

எனவே அதிகப்படியான நேரம் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்போது உடலினை இயக்கச் செய்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.