“ஐயோ, அம்மா! ஐயோ, அம்மா! ஐயோ, அம்மா!” இப்படியாக குரல் வந்து கொண்டே இருந்தது.
இந்த குரல் தான் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் 20 குடும்பங்களையும் வீதிக்கு கொண்டு வந்து விட்டது.
‘அப்படி என்ன?’ என்று தெரிய புகார் கொடுக்கப்பட்டு, காவல் துறையும் வந்தது.
அடுக்கு மாடியின் 5வது தளத்தில் இருந்து சத்தம் வருவதைக் கேட்டு உள்ளே சென்றனர் காவல் துறையினர்.
குற்றப்பிரிவு அலுவலர்கள் தடயங்களை ஆராய்ந்தனர்.
யாரும் அங்கே தென்படவில்லை. ஆனால் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
கதவுகள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன.
குரல் வந்த அலமாரி பக்கம் நகர்ந்தது காவல்துறை.
அலமாரியின் துணிமணிகளை கலைத்து பார்க்கும்போது ஒரு ரோபோட் (Robot) தன்னிச்சையாக குரல் எழுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் காவல்துறை ஆராய்ந்தபோது, அவ்வீட்டிற்கு வந்த இரு திருடர்களும் நன்றாக கோட் (Coat) , சூட் (Suit) அணிந்து எந்த சலனமும் இல்லாமல் லிப்ட்டைப் (Lift) பயன்படுத்தி வெளியேறியதும் தெரியவந்தது.
அவ்வீட்டிற்கு திருடர்கள் வந்தது பிற்பகல் 3.45 மணிக்கு.
அவ்வீட்டிலிருந்து சத்தம் கேட்க ஆரம்பித்தது பிற்பகல் 4.00 மணிக்கு.
அவ்வீட்டிலிருந்து திருடர்கள் வெளியேறியது பிற்பகல் 4.15 மணிக்கு
போலீசுக்கு விவரம் கொடுக்கப்பட்டு அவர்கள் அவ்வீட்டிற்கு வந்தது பிற்பகல் 4.25 மணிக்கு
ஆக, பட்டப்பகலில் திருடர்கள் வீட்டிற்குள் வந்து 30 நிமிடங்கள் தேடிய பிறகு நகையோ , பணமோ கிடைக்காததால் வீட்டை விரயப்படுத்தி விரத்தியில் சென்றது வெப்-கேமராவில் (web Camera) பதிவாகி இருந்தது.
இது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உலகம்!
செல்வராஜ் ராமன்
18/33, நெல்லுக்கடை தெரு
கும்பகோணம் 612001
கைபேசி: 9095522841