ஒத்தையில போறயே நீ ..
ஊருசனம் என்ன சொல்லும் …
செத்த நில்லு நானும்
உன்கூட வாரேன்
நம்மை சேர்ந்து பார்க்கும்
எல்லாமே வாழ்த்து பாடும்
நித்தம் பூக்கும் பூவைப்போல
உன் முகம்தான்
என்ன சொல்ல ….
சுத்தும் வண்டைப் போல
நானும் மாறிப் போனேன்
கொஞ்சம் தேனெடுத்து கொண்டு
செல்லப் போறேன்
கத்தும் கடல் அலைபோல
உன் கண்ணு ரெண்டும் போகுதடி …
முத்தெடுத்த சிப்பி போல
நானும் வாரேன் என்னை
மூழ்கிடாம கரை சேர்த்துப் போயேன்
வெத்தலையும் சுண்ணாம்பும் போல
நாம காத்திருக்க
வெட்டு பாக்கைப் போல
நீ சொல்லும் வார்த்தை
வாழ்க்கையில நம்மையுந்தான்
சேர்த்துப் பார்க்கும்
அத்தமக ரத்தினமே
ஆடிவரும் நெற்கிதிரே
கொத்தும் கிளி போல
நானும் காத்திருக்கின்றேன்
நம்ம சேர்ந்து வாழ காலம் வரும்
நீயும் பார்க்கப் போறடி
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!