எழுத்தாளர்களின் சரணாலயத்தை
கரையான்கள் அரிக்கின்றன
நூலகத்திலுள்ள புத்தகங்கள்
இரவில் மட்டும் பூக்கும்
எண்ணிக்கையில்லா பூக்கள்
நட்சத்திரங்கள்
தொலைக்காட்சி
பல நேரங்களில் உன்னைத்
தொலைக்கும் காட்சி
மூடித் திறந்தவுடன்
காற்று வருவதில்லை
புத்தக வாசம்
மடியில் வைத்து தட்டிக் கொடுத்து
தாலாட்டு கேட்கிறேன்
மடிக்கணினி
மூங்கில் குச்சி பக்கத்தில் இருந்தும்
ஆசிரியரால் அடிக்க இயலவில்லை
இணைய வகுப்பு
அந்தரத்தில்
ஓராயிரம் உயிர்கள்
தேன்கூடு
அவர் ஹைக்கூ கவிஞர்
மூன்றே வார்த்தையில் முடித்தார்
கருவறை, வகுப்பறை, கல்லறை.
அனைவரின் கண்ணீரும்
ஒருவரின் உறக்கம்
பிணம்
இருளைத் தேடிய
என் பயணம்
டார்ச் லைட்டோடு
வழிநெடுகிலும் பூக்கள்
மனம் முழுவதும் சோகம்
இறுதி ஊர்வலம்
கைகள் நடுங்க நடுங்க
பணத்தை அள்ளிக் கொடுத்தான்
மதுபாட்டில் வாங்க
தவறிக் கிணற்றில் விழுந்துவிட்டேன்
ஆனால் சாகவில்லை
கனவு
புதிதாகக் கட்டிய அணைக்கட்டு
நான்கே மாதத்தில் உடைந்து அழுகிறது
ஊழலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்
எண்ணிக்கையில்லா
உதடுகளின் சங்கமம்
பொதுக்கடை தேநீர் குவளை
ப. கலைச்செல்வன்
9385517371
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!