தானங்களில் சிறந்தது இரண்டு. ஒன்று அன்னதானம் மற்றொன்று வித்யாதானம். அதாவது ஏழைச்சிறுவர்களுக்கு கல்வி அளிப்பது. மற்ற அனைத்துத் தானங்களைவிட இந்த இரு தானங்களும் மகத்தான புண்ணிய பலன்களை அளிக்க வல்லவை ஆகும்.
பொதுவாக ஏழைகளுக்கும், தீர்த்த யாத்திரை செய்பவர்களுக்கும் செய்யும் அன்னதானம் மிக அதிக புண்ணிய பலன்களை அளிக்க வல்லது.
வசதி உள்ளவர்களுக்கு உணவளிப்பதை விட ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், அனாதைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் அளிக்கப்படும் உணவு அஸ்வ மேத யாகம் செய்த அளவிற்கு நற்பலன்களைத் தரும் என நீதி நூல்கள் கூறுகின்றன.
பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்து டோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம்.
அன்னதானம் செய்வதற்கு நேரம், நாள் என்ற கணக்கில்லை. அன்னதானத்தில் அளிக்கப்படும் உணவை ஏற்பவர்களுக்கு எவ்வித பாவமும் கிடையாது.