அன்னாசி கேசரி செய்வது எப்படி?

அன்னாசி கேசரி என்பது அன்னாசி பழத்தினைச் சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இதனை விழா நாட்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.

இதனுடைய சுவையும், மணமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். இனி எளிய வகையில் அசத்தலான அன்னாசி கேசரி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 

கேசரிக்கு தேவையான பொருட்கள்
கேசரிக்கு தேவையான பொருட்கள்

 

ரவை – 1 கப்

வெள்ளை சர்க்கரை – 1 கப்

தண்ணீர் – 2 கப்

அன்னாசி பழத்துண்டுகள் – 1/2 கப்

ஏலக்காய் – 3 எண்ணம்

முந்திரிப் பருப்பு – 10 எண்ணம் (முழமையானது)

கிஸ்மிஸ் பழம் – 20 எண்ணம்

நெய் – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்

 

செய்முறை

அன்னாசி பழத்தை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

1/2 கப் அன்னாசி பழத் துண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு துண்டுகளை எடுத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

மீதம் உள்ள அன்னாசி பழத் துண்டுகளை அப்படியே வைத்திருக்கவும்.

முந்திரி பருப்புகளை ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

ஏலக்காயை லேசாக நசுக்கிக் கொள்ளவும்.

 

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, முதலில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அதில் ரவையைப் போட்டு வாசனை வரும்வரை வறுக்கவும்.

ரவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும்.

 

தேங்காய் எண்ணெய் காய்ந்ததும்
தேங்காய் எண்ணெய் காய்ந்ததும்

 

ரவையை வறுக்கும் போது
ரவையை வறுக்கும் போது

 

வாணலியில் 4 ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழத்தைப் போட்டு வறுக்கவும்.

 

முந்திரி, கிஸ்மிஸை வறுக்கும் போது
முந்திரி, கிஸ்மிஸை வறுக்கும் போது

 

பின்னர் அதனுடன் தண்ணீரை ஊற்றவும்.

அதில் உடைத்த ஏலக்காயைச் சேர்க்கவும்.

 

தண்ணீரைச் சேர்த்ததும்
தண்ணீரைச் சேர்த்ததும்

 

தண்ணீர் கொதித்ததும் அதில் வறுத்து ஆறிய ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டி விழாமல் கிளறவும்.

பின்னர் அதனுடன் அன்னாசி பழத் துண்டுகள் மற்றும் அன்னாசி பழக்கூழ் ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும்.

 

அன்னாசி பழத்துண்டுகள், பழக்கூழ் சேர்த்ததும்
அன்னாசி பழத்துண்டுகள், பழக்கூழ் சேர்த்ததும்

 

சர்க்கரை சேர்க்கும் பருவம்
சர்க்கரை சேர்க்கும் பருவம்

 

கலவை கெட்டியானதும் அதில் வெள்ளைச் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும்.

 

வெள்ளைச் சர்க்கரையைச் சேர்த்ததும்
வெள்ளைச் சர்க்கரையைச் சேர்த்ததும்

 

சர்க்கரை கரைந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

 

சர்க்கரை இளகியதும்
சர்க்கரை இளகியதும்

 

சுவையான அன்னாசி கேசரி தயார்.

 

சுவையான அன்னாசி கேசரி
சுவையான அன்னாசி கேசரி

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் கேசரி பவுடர் சேர்த்து கேசரி தயார் செய்யலாம்.

வெள்ளை சர்க்கரை சேர்த்து இளகி லேசாக கெட்டிபடத் தொடங்கியதும் இறக்கி விடவும்.

சர்க்கரை சேர்த்து நிறைய நேரம் அடுப்பில் வைத்திருந்தால் சர்க்கரை கம்பி பதம் வந்து கேசரி வாயில் ஒட்டும்.

ஜான்சிராணி வேலாயுதம்