சின்ன சின்ன நட்சத்திரம் பூத்துக்கிடக்கு
சிந்தாம நீ எடுத்து சேர்த்து வைச்சுக்கோ
வண்ண வண்ண நூலாலே கோர்த்து வச்சுக்கோ
பொன்போல கழுத்தில் போட்டு வைச்சுக்கோ
தங்க நிலா வானத்துல தத்திச் செல்லுது
தாவி அதை பிடிச்சு கொண்டு வந்திடு
இங்க ஒரு தூளி கட்டிதூங்கச் செய்திடு
சங்கத்தமிழ் எடுத்து தாலாட்டு பாடிடு
நீல மேகம் தன்முகத்தை மூடிக்கொள்ளுது
வெண் மேக மலரைச் சூடிக் கொள்ளுது
சென்று அந்த மேகமலர் கொண்டு வந்திடு
அன்பு கொண்ட அன்னைக்கு அதை சூடிடு
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)