காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே
ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ
அடுத்த நொடியினை கணிக்க வியலாது
அயராது தொடுக்கிறோம் வாஞ்சையின் முரணினை
வறுமையும் வளமையும் நாணய பக்கங்கள்
சுழலும் நிலைதனில் சூழலும் மாறிடும்
விடைபெறும் பொழுதினில் வீடுபேறும் கிட்டிடும்
அடைமழை போலவே அன்பினைப் பொழிந்திடில்
நிலையாமை நிலைதனை நித்தமும் நினைத்தால்
நிலைத்து நிற்குமே மனிதமும் புவிதனில்
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353
மறுமொழி இடவும்