மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், திருமதி கே.ஆர்.செல்லம்மாள் நினைவு உலகத் தமிழாய்வு மையம், மதுரை
சரஸ்வதி அறக்கட்டளை & அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை இணைந்து வழங்கும் சர்வதேச முத்தமிழ் விருதுகள் விழா 2022 ல் எழுத்தாளர் கி.அன்புமொழி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற கி.அன்புமொழி அவர்களை இனிது வாழ்த்துகிறது.
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed. அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார்.
அன்புமொழி அவர்கள் இனிது இதழில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர். அவருடைய கவிதைகள் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துபவை. அவருடைய கதைகள் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல கருத்துக்களை எடுத்துரைப்பவை.
அவரின் ஆசிரியப் பணியும் எழுத்துப் பணியும் சிறக்க இனிது வாழ்த்துகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!