என்ன ஒரு அழகு
அசாத்திய திறமை வாய்ந்தது
எத்தனை பண்பு நிறைந்தது
அத்தனை வம்பும் செய்வது
காதலாய் கசியும்
கணிவாய் புசியும்
பணத்தால் ருசியும்
பாவத்தால் நசியும்
ஆகா என்ன ஒரு அழகு
அன்பே காதல்
அன்பே கருணை
அன்பே சகோதரத்துவம்
அன்பே சிவம்
ஆகா என்ன ஒரு அழகு
அன்பின் பொருட்டு கொடுக்கப்பட்ட
வாக்கு இருக்கிறதே அதை
காப்பாற்ற பட்டபாட்டை படித்தறிவோம்
படும் பாட்டை படித்தாலும் அறியோம்…
விந்தையிலும் விந்தை…