அரைவேக்காடு உணவு மட்டுமல்ல
அரைவேக்காடு உணர்வும் கூட
ஆரோக்கியத்திற்குக் கேடு!
ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை
அப்படியே அள்ளிக் கொட்ட
எல்லா சமயமும் உகந்து வராது!
அமைதி காத்து நிற்பதில்
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு!
மாற்றான் இகழலாம்
கோழை இவன் என்று!
வீரத்தின் நகல் விவேகம்
என்பதை உணர்ந்தவனால்
மட்டுமே,
அவதூறு விமர்சனங்களை
புறந்தள்ளி,
நிகழ்கால நிதர்சனங்களை
நல்லனவாக மாற்றும்
வல்லமையை
உருவாக்க இயலும்!
அக்காலம் வரும் வரை
காத்திருக்க
அமைதியும் நிதானமும் என்றும்
கவசங்காளாகும்!
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!